பட்டாசுக் கடையில் தீ! இரண்டு வாகனங்கள் நாசம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 24: நேற்று இரவு ஜொகூர் பாருவில் பட்டாசுகள்  விற்கும் ஒரு கடையில் தீப்பிடித்ததில் இரண்டு வாகனங்கள் எரிந்து நாசமாயின.  இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 8.32 மணிக்கு அவசர அழைப்பு வந்ததை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டதாக லார்கின் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டுக் கட்டளை அதிகாரி நகிஷ் நெக்மத் கூறினார். அங்கு இருந்த ஒரு புரோட்டான் ஜென்-2 வாகனம் மற்றும் ஒரு உணவு லாரிக்கும் தீ பரவியதாக அவர் கூறினார்.

பட்டாசுகள்  விற்பனைக்காகப் பயன்படுத்தப்பட்ட தற்காலிகக் கூடாரமும் எரிந்து நாசமானது.

தீ விபத்து தொடர்பான 44 வினாடிகள் கொண்ட காணொளிக் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *