பினாங்கு குப்பைக் கிடங்கில் தீ!

top-news
FREE WEBSITE AD

நிபோங் தெபால், செப் 23: புலாவ் புரூங் குப்பைக் கிடங்கில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

இதனை அடுத்து, பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு காலை 6.39 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக மீட்புப் பணிகளுக்கான உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் தெரிவித்தார்.

மூன்று தீயணைப்பு இயந்திரங்களுடன் ஏழு தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.

100 க்கு 50 சதுர மீட்டர் பரப்பளவில் குப்பைகள் குவிந்து கிடப்பதாகவும்.

தீயை அணைக்கவும் மேலும் பரவாமல் தடுக்கவும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து முயற்சியை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *