ஷா ஆலம் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ!
- Muthu Kumar
- 13 Dec, 2025
ஷா ஆலம், டிச13:
ஷா ஆலம் பண்டார் புஞ்சாக் ஆலம், தாமான் இண்டஸ்ட்ரி ஆலம் ஜெயாவில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ மதியம் 1.30 மணியளவில் கட்டுப்படுத்தப்பட்டதாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.
இந்த நடவடிக்கையில் காவல்துறை, ஆயர் சிலாங்கூர் மற்றும் தெனாகா நேஷனல் பெர்ஹாட் பணியாளர்கள் ஈடுபட்டதாக அவர் கூறினார்.முன்னதாக, காலை 11.53 மணிக்கு தீ விபத்து குறித்து துறைக்கு தகவல் கிடைத்ததாக முக்லிஸ் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



