குண்டாங்கிலுள்ள பிவிசி தொழிற்சாலை தீப்பற்றியது!

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், அக்.4-

குண்டாங், தாமான் குண்டாங் ஜெயாவிலுள்ள பிவிசி குழாய் தயாரிப்புத் தொழிற்சாலை தீயினால் சேதமுற்றது.கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் இரவு 10.41 மணிக்கு அழைப்பு வந்ததாக மாநிலத் தீயணைப்புத் துறையின் நடவடிக்கை பிரிவுத் துணை இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

இதில் மேல் நடவடிக்கைக்காக பத்து ஆராங் தீயணைப்பு நிலைய தீயணைப்பு படையினர் மற்றும் உதவிக்காக ரவாங் பெஸ்தாரி ஜெயா, செலாயாங், ஷா ஆலம் தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

பிவிசி குழாய்கள் தயாரிப்புத் தொழிற்சாலை சம்பந்தப்பட்ட தீ விபத்தில் 80 விழுக்காடு சேதம் ஏற்பட்டதாக நடவடிக்கை கமாண்டர் தெரியப்படுத்தினார். இருந்த போதிலும் அதில் உயிர் சேதம் ஏதுமில்லை.

தீ இரவு 11.30 மணிக்குக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. பழுது பார்க்கும் பணி நேற்று அதிகாலை 5.00 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது. இத்தீயணைப்பு நடவடிக்கையில் 9 தீயணைப்பு இயந்திரங்களில் 36 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டதாக ஓர் அறிக்கையில் அகமட் முக்லிஸ் முக்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *