செந்தோசாவில் கடைவீட்டில் தீ! - சிக்கிய நால்வர் மீட்கப்பட்டனர்
- Shan Siva
- 16 Aug, 2025
ஷா ஆலம், ஆக. 16- கிள்ளான், தாமான் செந்தோசாவில் உள்ள ஒரு கடை வீட்டில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த
விபத்தில் சிக்கிய முதியவர் உட்பட நான்கு
பேர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரால் பாதுகாப்பாக
மீட்கப்பட்டனர்.
மூன்று மாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக
படிக்கட்டுகளில் அடர்ந்த புகை சூழ்ந்ததால் 17 முதல் 81 வயதுடைய அந்த நால்வரும் சிக்கிக்கொண்டதாக சிலாங்கூர் தீயணைப்பு துறையின் உதவி நடவடிக்கை இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.
காலை 6.16 மணிக்கு தீ வெற்றிகரமாக
கட்டுப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



