கிள்ளானில் 3 வீடுகளில் தீ!

- Shan Siva
- 31 Mar, 2025
ஷா ஆலம், மார்ச் 31: கிள்ளான், தாமான் ஸ்ரீ காடோங்கில் நேற்று இரவு 11 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில், மூன்று வீடுகள் சேதமடைந்தன.
இருப்பினும் இந்த தீ விபத்தில், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து தனது துறைக்கு இரவு 11.09 மணிக்கு அழைப்பு வந்ததாகவும், கிள்ளான் வடக்கு, தெற்கு மற்றும் அண்டாலாஸ் தீயணைப்பு மீட்பு நிலையங்களில் இருந்து 16 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அங்கு விரைந்ததாகவும் அவர் கூறினார்.
இந்த தீ விபத்தில் ஒரே ஒரு வீடு மட்டுமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அது 50 சதவீதம் அழிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 11.45 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டதாக அஹ்மத் முக்லிஸ் மேலும் கூறினார். மொத்த இழப்புகள் மற்றும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று அவர் தெரிவித்தார்!
Satu kebakaran berlaku di Taman Sri Gadong, Klang pada pukul 11 malam, menyebabkan tiga rumah rosak tanpa sebarang kemalangan jiwa. Pasukan bomba dengan 16 anggota berjaya memadam kebakaran sepenuhnya pada 11.45 malam. Punca kebakaran masih disiasat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *