தெலுக் இந்தான் அருகே உள்ள கம்போங் திரெங்கானுவில் தீ விபத்து!

top-news
FREE WEBSITE AD

ஈப்போ, அக் 26:

தெலுக் இந்தான் அருகே உள்ள கம்போங் திரெங்கானுவில் உள்ள ஜாலான் மாக் இந்தானில் நேற்று இரவு நள்ளிரவுக்குப் பிறகு ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு வீடுகள் எரிந்து நாசமாகின.பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு அதிகாலை 12.40 மணியளவில் அவசர அழைப்பு வந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தலைவர் ஷாஸ்லீன் ஹனாஃபியா தெரிவித்தார்.

தெலுக் இந்தான் மற்றும் ஊத்தான் மெலிந்தாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் தன்னார்வ தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.தீ விபத்தில் சுமார் 90%வீடுகளும், மூன்று மோட்டார் சைக்கிள்களும் எரிந்து நாசமாகின, ஆனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

தீ அதிகாலை 1.10 மணியளவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அதிகாலை 3.05 மணியளவில் முழுமையாக அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் மற்றும் மதிப்பிடப்பட்ட இழப்புகள் இன்னும் விசாரிக்கப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *