KL ஹாங் துவா அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியில் தீ! ஒருவர் பலி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்: இன்று அதிகாலை, கோலாலம்பூர் ஹாங் துவா அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்தார்.

இது தொடர்பாக அதிகாலை 2.54 மணிக்கு MERS999 ஹாட்லைன் மூலம் அவசர அழைப்பு வந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையம் கூறியது.

இதனை அடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு, அதிகாலை 2.58 மணிக்கு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து அதிகாலை 3.10 மணிக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், வீடு முழுமையாகச் சேதமுற்றுள்ளதாகவும் தீயணைப்புத்துறை  மூத்த செயல்பாட்டுத் தளபதி முகமது ரிடுவான் அக்யார் தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்டவர் குளியலறையில் இறந்து கிடந்ததாகவும் அவர் கூறினார்..

உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில்,  தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *