ஷம்சுல் ஹாரிஸின் பிரேத பரிசோதனை குறித்து சுகாதார இயக்குநர் பொய் உரைத்துள்ளார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 29-

ஷம்சுல் ஹாரிஸின் பிரேத பரிசோதனை குறித்து சுகாதார இயக்குநர் பொய் உரைத்துள்ளார். யூடிஎம் ரிசர்வ் அதிகாரிகள் பயிற்சிப் படை கேடட் ஷம்சுல் ஹாரிஸ் ஷம்சுடினின் தாயாரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் நரன் சிங் இவ்வாறு கூறினார்.

ஜொகூரில் உள்ள கோத்தா திங்கி மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகளால் சம்சுலின் முதல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என அந்த இயக்குநர் கூறியுள்ளார்.ஆக இவ்விவகாரத்தில் சுகாதார அமைச்சின் சுகாதார இயக்குநர் டாக்டர் மகாதர் அப்துல் வஹாப் பொய் சொன்னதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் மருத்துவ அதிகாரி பிரேத பரிசோதனை செய்ததாக சத்தியம் செய்ததாக நரன் விளக்கினார்.
இயக்குநர் பொய் சொன்னார் என நரன் கூறினார்.முன்னதாக ஆகஸ்ட் 21 தேதியிட்ட பிரமாணப் பத்திரத்தில்,சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியின் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்ததாக மருத்துவ அதிகாரி கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *