சேமிப்புக் கிடங்கில் தீ! ஆரஞ்சு, பேரீட்சை, வெங்காயம் தீயில் பொசுங்கின!
- Shan Siva
- 02 Feb, 2026
கோத்தா பாரு, பிப் 2: கிளந்தான், கோத்தா பாரு ஜாலான் கெபுன் சுல்தானில் உள்ள ஒரு சேமிப்புக் கிடங்கு நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமானது.
கிடங்கில் பல்லாயிரக்கணக்கான டன் ஆரஞ்சு பழங்கள், பேரீச்சம்பழம் மற்றும் வெங்காயம் ஆகியவை சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது, அவை தீ விபத்தில் எரிந்து நாசமாகின.
இச்சம்பவம் குறித்து இரவு 9.09 மணிக்கு தங்களுக்கு அழைப்பு வந்ததாக கிளந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
தீயணைப்பு இயந்திரங்கள் உடனடியாக அனுப்பப்பட்டு இரவு 9.16 மணிக்கு சம்பவ இடத்திற்குச் சென்றதாக அவர் கூறினர்.
இந்த விபத்தில் மூன்று லாரிகளும் தீயில் எரிந்து நாசமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



