IOI City Mall GSC சினிமா சமையலறையில் தீ!
- Shan Siva
- 20 Sep, 2025
சிப்பாங், செப் 20: புத்ராஜெயாவில் உள்ள ஐஓஐ சிட்டி மாலில் உள்ள ஜிஎஸ்சி சினிமா தியேட்டரின் சமையலறையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.
இன்று காலை 10 மணியளவில் தீ விபத்து குறித்து துறைக்கு தகவல் கிடைத்ததை
அடுத்து, ஒரு குழு
அனுப்பப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு உதவி
இயக்குநர் அஹ்மத் முகிலிஸ் மொக்தார் தெரிவித்தார்.
தீயணைப்பு இயந்திரம், அவசர மருத்துவ
மீட்பு சேவை வாகனம் மற்றும் ஏழு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக
அவர் மேலும் கூறினார்.
அவர்கள் காலை 10.24 மணியளவில்குழு வந்தபோது தீயை அணைக்கும் முயற்சிகள் ஏற்கனவே
நடந்து கொண்டிருந்தன என்று அவர் கூறினார்,
சிறிது
நேரத்திலேயே தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டதாகவும் கூறினார்.
இதனை அடுத்து GSC அதன்
அதிகாரப்பூர்வ X கணக்கில் ஒரு
பதிவில், GSC IOI சிட்டி மால் 2
(கிழக்கு) இல் திரையிடல்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தது.
சினிமா சூழலை பாதிக்கும் எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக GSC IOI சிட்டி மால் 2 (கிழக்கு)
இல் திரையிடல்கள் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.
விருந்தினர்களின் வசதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



