புக்கிட் மெர்தாஜாமில் தீ! BMW உட்பட 4 கார்கள் எரிந்து நாசம்
- Shan Siva
- 22 Dec, 2025
புக்கிட் மெர்தாஜாம், டிச 22: பினாங்கு புக்கிட் மெர்தாஜாம் ஜாலான் சோங் பான் கெங் பகுதியில் அமைந்துள்ள ஒரு உணவுக் கூடம் அருகே இன்று பிற்பகலில் ஏற்பட்ட கார் தீ விபத்தில், நான்கு வாகனங்கள் சேதமடைந்தன.
மதியம் 2.27 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து பண்டார் பெர்டா தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு அனுப்ப்ப்பட்ட்தாகவும் பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (Fire and Rescue Department) துணை இயக்குநர் (செயல்பாடுகள்) ஜான் சாகுன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
இந்த தீ விபத்தில் நான்கு வாகனங்கள் பாதிக்கப்பட்டன.
அவற்றில், டொயோட்டா வெல்ஃபையர் MPV மற்றும் BMW X5 SUV ஆகிய இரண்டு வாகனங்கள் சுமார் 95 சதவீதம் தீக்கிரையாகி
சேதமடைந்தன.
மேலும், இரண்டு டொயோட்டா கேம்ரி செடான் கார்கள் தலா 30 சதவீதம் மற்றும் 15 சதவீதம் அளவில்
சேதமடைந்தன என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் ஜான் சாகுன் பிரான்சிஸ்
கூறினார்.
தீ 2.46 மணிக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு,
3.04 மணிக்கு
முழுமையாக அணைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆய்வு மற்றும் சுத்தப்படுத்தும் பணிகள்
மேற்கொள்ளப்பட்டு, 3.36 மணிக்கு நடவடிக்கை
நிறைவடைந்தது என்றும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



