தம்புன் அருகே தீ விபத்து - 80 வயது முதியவர் மரணம்!
- Muthu Kumar
- 15 Nov, 2025
ஈப்போ, நவ 15:
தம்புன் அருகே உள்ள தாமான் பெர்பாடுவான் ரியாவில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். பாதிக்கப்பட்டவரின் உடல் ஒரு படுக்கையறையில் கண்டெடுக்கப்பட்டதை பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் ஷாஸ்லீன் முகமட் ஹனாஃபியா, உறுதிப்படுத்தினார்.
தீ விபத்தில் வீடு 80% சேதமடைந்தது, அதைக் கட்டுப்படுத்த பல தீயணைப்புப் பிரிவுகள் தேவைப்பட்டதாக அவர் கூறினார்.
பிற்பகல் 1 மணிக்கு வந்த பேரிடர் அழைப்பின் பேரில் தம்புன் மற்றும் ஈப்போ நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் உடனே விரைந்தனர்.இந்த சம்பவத்தில் கேரேஜில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் உட்பட நான்கு வாகனங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்டவரின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கூடுதல் வாகனங்களும் தீயில் எரிந்தன.தீ நான்கு அண்டை வீடுகளுக்கும் பரவியது, இதனால் 2% முதல் 15% வரை சேதம் ஏற்பட்டது.பரவிய தீயில் இருந்து பெரோடுவா மைவி கார் 10% சேதத்தை சந்தித்தது. பாதிக்கப்பட்டவரின் உடல் மேலதிக விசாரணைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



