ரசாயனக் கசிவினால் காற்று தூய்மைக்கேடு; தொழிற்சாலை மீது உரிய நடவடிக்கை!
- Muthu Kumar
- 02 Oct, 2025
பாசிர் கூடாங், அக்.2-
ஜொகூர், பாசிர கூடாங் ஜாலான் பிளாட்டினமில் உள்ள ஒரு தொழிற்சாலையில், நேற்று முன்தினம் இரவு ரசாயன கசிவினால் ஏற்பட்ட காற்று தூய்மைக்கேட்டு சம்பவத்தில் மூவர் பாதிக்கப்பட்டதை அடுத்து, அம்மாநில மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறை (ஜே.பி.பி.எம்) நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பில் நேற்று முன்தினம் இரவு 11.11 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்த நிலையில், பாசிர் கூடாங் தீயணைப்பு, மீட்பு நிலையத்தினரோடு. லார்கினின் அபாயகரமான ரசாயன சிறப்புக் குழுவான ஹஸ்மாட்டும் இரவு மணி 11.16 அளவில் சம்பவ இடத்தை அடைந்தன.
அந்த தொழிற்சாலைப் பகுதியில் ஏற்பட்ட ரசாயன கசிவு சம்பவத்தில் மூவர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜே.பி.பி.எம் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தது. இருப்பினும், தீயணைப்புப் படை அங்கு வருவதற்கு முன்பே சுகாதார அமைச்சு பாதிக்கப்பட்டவர்களை அழைத்து சென்றதால் பாதிக்கப்பட்டவர் பற்றிய விரிவான தகவல்களைப் பெற முடியவில்லை.
மேலும், ரசாயன காற்று தூய்மை கேட்டினால், எவ்வித ஆபத்தும் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக ஹஸ்மாட் குழு தொழிற்சாலை பகுதியில் முழுமையான ஆய்வுகளையும் கண்காணிப்பையும் மேற்கொண்டது. சம்பவம் நிகழ்ந்த பகுதியில் காற்று அளவீடு இயல்பு நிலைக்குத் திரும்பிய நிலையில், அதிகாலை மணி 3.37 அளவில் பாதுகாப்பு நடவடிக்கை முழுமையாக நிறுத்தப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



