பச்சை பச்சையாய் அழகு காட்டப்போகும் KLIA விமான நிலையம்!

top-news
FREE WEBSITE AD

சிப்பாங், ஜூலை 17: 2026 ஆம் ஆண்டு மலேசியாவுக்கு வருகை தரும் ஆண்டை முன்னிட்டு, கோலாலாம்பூர்  சர்வதேச விமான நிலையத்தின் (KLIA) சுற்றுப்புறங்களை அழகுபடுத்துவதற்காக RM 3 மில்லியன் மதிப்பிலான புதிய பசுமை நிலத்தோற்றத் திட்டம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடையும் என்று வீடமைப்பு மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர்  Nga Kor Ming தெரிவித்துள்ளார்.

KLIA முனையம் 1 மற்றும் முனையம் 2 இன் பிரதான நுழைவாயில்களில் குறிப்பிடத்தக்க அழகியல் மேம்பாடுகளைக் கொண்டுவரும் திட்டம் இந்த திட்டம் என்று அவர் கூறினார்.

இரண்டு முனையங்களிலிருந்தும் வெளியேறும் சாலைகளும் பசுமையான மாற்றத்தைப் பெறும். மேலும் இயற்கையான தோற்றத்திற்காக பாதையில் பல்வேறு புதிய தாவரங்கள் சேர்க்கப்படும்.

பன்முகத்தன்மையில் நல்லிணக்கம் என்ற கருப்பொருளில் வித்தியாசமான பல தாவர வகைகளை இதற்காகப் பயன்படுத்தவிருப்பதாக அவர் கூறினார்.

திட்டத்தின் வடிவமைப்பு மலேசிய விமானப் போக்குவரத்து நிறுவனத்துடன் இணைந்து தேசிய நிலப்பரப்புத் துறையால் முழுமையாக உருவாக்கப்படும் என்று Nga குறிப்பிட்டார்.

 இந்த திட்டம் முடிவடைய குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *