மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தில் காற்றழுத்தப் பிரச்னை! நடுவானில் பதறிய பயணிகள்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 22: நேற்று கோலாலம்பூரிலிருந்து சரவாக்கின் பிந்துலுவுக்குச் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென கேபின் அழுத்தப் பிரச்சினை ஏற்பட்டதில் பரபரப்பு நிலவியது.

பயணிகளை அச்சத்தில் ஆழ்த்திய இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று மலேசியா ஏவியேஷன் குரூப் (MAG) தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து விமானக் குழுவினர் அவசரமாக விமானத்தைக் குறைந்த உயரத்திற்கு இறக்கி, நிலையான பாதுகாப்பு நடைமுறைகளுக்கு ஏற்ப பயணிகளுக்கு ஆக்ஸிஜன் முகமூடிகளைப் பொருத்தினர்.

இச்சம்பவம் குறித்து விமான நிறுவனம் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH2742 காலை 10.31 மணிக்கு பிந்துலு விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

பயணிகளின் இந்த  அசௌகரியத்திற்காக மலேசியன் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கேட்டுக் கொண்டது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *