சிலாங்கூர் மாநிலத்தில் முதல் கபடி விளையாட்டுத் தளம் பூச்சோங்கில் அதிகாரப்பூர்வத் திறப்பு விழா!
- Muthu Kumar
- 28 Jul, 2025
பூச்சோங், ஜூலை 28-
நாங்கள் ஒரு பெரிய சாதனையைப் புரிந்திருக்கிறோம். பூச்சோங்கில் ஒரு கபடி விளையாட்டுத் தளத்தை நாங்கள் நிர்மாணித்திருக்கிறோம். சுபாங் ஜெயாவில் இதுதான் முதல் கபடித் தளமாக விளங்குகிறது.
மாநகர் மன்றத்தின் இந்திய உறுப்பினராக இந்த கபடி தளம் அதிகாரப்பூர்வமாகத் நேற்று திறப்பு விழா கண்டது. இத்தளத்தை சுபாங் ஜெயா மாநகர் மன்ற உறுப்பினர் டத்தோ அமிருல் அஜிஸான் டத்தோஸ்ரீ அப்துல் ரஹிம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்ததாக நகராண்மைக் கழக உறுப்பினர் பரிதிவாணன் ராமசாமி தெரிவித்தார்.
இந்த இடத்தில் மூவின மக்களும் ஒன்றாகச் சேர்ந்து விளையாட ஊக்குவிக்கப்படுகின்றனர். இதற்கு வெ.450,000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது ஒரு தளம் மட்டுமே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. குழுவிலுள்ளவர்களின் எண்ணிக்கை பெரிதாக இருந்தால் 2 தளங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று டத்தோ அமிருல் அஜிஸான் டத்தோஸ்ரீ அப்துல் ரஹிம் தெரிவித்தார்.
இதில் நான் ஒரு விதையைத்தான் போட்டிருக்கிறேன். இதில் உடை மாற்றுவதற்கான அறை, கழிப்பறை அனைத்தும் அடுத்தாண்டில் நிர்மாணிக்கப்படும் என்று வாக்குறுதியளிக்கப்பட்டது.
அதை நான் அடுத்தாண்டில் தொடர்ந்து மேற்கொள்வேன். நான் இவ்வளவு முயற்சி
மேற்கொள்வதற்குக் காரணம் என் தந்தை ஒரு கபடி விளையாட்டாளர். இன்று நம் இந்தியர்களுக்கு கபடி விளையாட தளமில்லாத காரணத்தினால்தான் இம்முயற்சியை நான் மேற்கொண்டேன்.
பொதுவாக ஏதோ ஓரிடத்தில் கபடி தளம் நிர்மாணிக்கப்படும் போது அங்கு புதிதாகக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு நம்மை விரட்டியடித்து விடுவார்கள். இதற்கு ஒரு முறையான தளமில்லை. ஆனால் கபடிக்கான முறையான தளமாக நிர்ணயிக்கப்பட்டதில் இங்கு கட்டடம் ஏதும் நிர்மாணிக்கப்படாது. சிலாங்கூரிலுள்ள யார் வேண்டுமானாலும் இங்கு வந்து கபடிக்குப் பயிற்சிகள் மேற்கொள்ளலாம்.
கபடித் தளம் அமைக்க 15 ஆண்டு காலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு மாநகர் மன்ற உறுப்பினரானதன் வழி அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்தின் நிலத்தில் இத்தளம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
முறையான ஒரு கடிதத்தைக் கொடுத்து இங்கு நீங்கள் சற்றும் தயங்காமல் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் பயிற்சி மேற்கொள்வதை வந்து பார்க்கலாம். இந்த மாதிரியான ஓர் இடத்தை மிகவும் சிரமப்பட்டுத்தான் நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம் என்று பரிதிவாணன் ராமசாமி குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பீ யின் மற்றும் மஇகாவின் முன்னாள் உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



