முதலில் எங்களுக்கு அதிகாரத்தைக் கொடுங்கள்... பிறகு பிரதமர் யார் என்று அறிவிக்கிறோம் - பாஸ் கட்சி அதிரடி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 29: புத்ராஜெயாவைக் கைப்பற்றிய பிறகுதான் பெரிகாத்தான் நேஷனல் (PN) யாரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் என்று பாஸ் ஆன்மீகத் தலைவர் ஹாஷிம் ஜாசின் தெரிவித்துள்ளார்.

பாஸ் கட்சியிலேயே அந்தப் பொறுப்பை ஏற்கக்கூடிய பல திறமையான தலைவர்கள் இருந்ததாகவும், ஆனால், பாஸ் கட்சி இப்போதைக்கு ஒரு "போஸ்டர் பாய்"-ஐ முன்வைக்காது என்றும் அவர் கூறினார்.

தங்களிடம் இன்னும் ஒரு வெளிப்படையான போஸ்டர் பாய் இல்லாமல் இருக்கலாம், ஆனால் முதலில் எங்களுக்கு அதிகாரத்தை கொடுங்கள், பின்னர் வேட்பாளரை பெயரிடுவோம் என்று அவர் கூறினார்.

தற்போதைய அரசாங்கத்தை விட மிகச் சிறப்பாக ஆட்சி செய்வோம் என்று அவர் கூறியதாக உத்துசான் மலேசியா மேற்கோள் காட்டியுள்ளது.

 தலைமை தாங்கும் திறன் கொண்டவர்கள் தொழில் வல்லுநர்கள் மட்டுமல்ல. மத அறிஞர்களும் திறம்பட வழிநடத்த முடியும். இப்போதும் இதுவே பொருந்தும் என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *