முதலில் தேர்தல்! அப்புறம் ம.இ.கா-வோடு ஒரு கப் காஃபி! - அம்னோ
- Shan Siva
- 23 Nov, 2025
கோத்தா கினபாலு, நவ 23: பொது மோதல்கள் இல்லாமல், தனிப்பட்ட முறையில் உள் விவகாரங்களைத் தீர்ப்பதில் பாரிசன் நேஷனல் (பிஎன்) உறுதியாக உள்ளது என்று அதன் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் சாம்ப்ரி அப்துல் காதிர் கூறினார்.
கூட்டணி தற்போது சபா பொதுத் தேர்தலில் கவனம் செலுத்தி வருவதாகவும், உள் விவகாரங்கள் தொடர்பான எந்தவொரு கூட்டங்களும் அல்லது விவாதங்களும் தேர்தல் செயல்முறை முடிந்ததும் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
உயர்கல்வி அமைச்சராகவும் இருக்கும் சாம்ப்ரி, சபா தேர்தலில் பாரிசான் தற்போது கவனம் செலுத்துவதை மஇகா புரிந்துகொள்கிறது என்றும், நவம்பர் 29 தேர்தலுக்குப் பிறகு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் விவாதிக்கப்படும் என்றும் தாம் நம்புவதாக அவர் கூறினார்.
தேர்தலுக்குப் பிறகு மஇகாபிரச்சினையை நாங்கள் தீர்ப்போம் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள் என்று அவர் கூறினார்.
ஒன்றாக ஒரு கப் காபி அருந்திக்கொண்டு பேசுவோம் என்று மலேசிய சபா பல்கலைக்கழகத்தின், இரண்டு மாணவர் குடியிருப்புத் தொகுதிகளைப் பார்வையிட்ட பிறகு அவர் கூறினார்.
கூட்டணிக்குள் எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்க அழைக்கப்பட்டால், பாரிசான் தலைமையைச் சந்திக்க கட்சி தயாராக உள்ளது என்ற மஇகா தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனின் அறிக்கை குறித்து கேட்டபோது அவர் இவ்வாறு பதிலளித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



