குடிமக்கள் அல்லாதாருக்கு பிறப்புச் சான்றிதழ்; அனைத்துலக கும்பலுக்குத் தொடர்பு!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, மார்ச் 14-

குடிமக்கள் அல்லாதாருக்கு போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி பிறப்புப் பத்திரத்திற்குப் பதிவுசெய்யும் கும்பலுக்கும் வெளிநாட்டைச் சேர்ந்த குழந்தைக் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏக காலத்தில் செயல்படும் அக்கும்பல், சட்டப்பூர்வமான தனியார் மருத்துவமனைகளிலிருந்து வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் போன்று போலி ஆவணங்களைத் தயாரிக்கின்றன என்று உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன்
நேற்று தெரிவித்தார். இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி தேசிய பதிவுத்துறையிடமிருந்து சட்டப்பூர்வமான பிறப்புச் சான்றிதழ்களைப் பெற அக்கும்பல் முயல்கிறது,

ஆவணமற்ற குழந்தைகளுக்குக் குடியுரிமை பெற்றுத்தருவதற்காக கள்ளச்சந்தையில் அச்சான்றிதழ்கள் விற்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.ஜொகூரிலும் கிள்ளான் பள்ளத்தாக்கிலும் கிளினிக்குகள் மற்றும் சட்ட நிறுவனங்கள் உட்பட பல வளாகங்களில் அக்கும்பல்களுக்கு எதிராக மலேசிய வஞ்சஊழல் ஒழிப்பு ஆணையம் அண்மையில் சோதனை நடத்தியது.

அதில் அக்கும்பலைச் சேர்ந்த தலைவன், மூன்று இடைத்தரகர்கள், ஆறு விண்ணப்பதாரர்கள் கைது செய்யப்பட்டனர். டத்தோஸ்ரீ பட்டத்தைக் கொண்டவரான கும்பல் தலைவன் ஒரு மருத்துவர் ஆவார்.

Satu sindiket disyaki terlibat dalam pemalsuan dokumen bagi pendaftaran sijil kelahiran bukan warganegara dan mempunyai kaitan dengan kumpulan penculikan kanak-kanak antarabangsa. Menteri Dalam Negeri mendedahkan sindiket ini menggunakan dokumen palsu menyerupai dokumen hospital swasta bagi mendapatkan sijil kelahiran sah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *