தேசிய போலீஸ் படைத் தலைவரை சந்தித்தார் மாமன்னர்!
- Muthu Kumar
- 18 Aug, 2025
கோலாலம்பூர், ஆக.18-
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நேற்று புக்கிட் துங்கு அரண்மனையில் தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயிலுடன் சந்திப்பு நடத்தினார்.
அரச மலேசிய போலீஸ் படை எதிர்நோக்கும் தற்போதைய பிரச்சனைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விளக்குவதை நோக்கமாகக் கொண்டு இச்சந்திப்பு மேற்கொ ள்ளப்பட்டதாக சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முஹமட் காலிட்டுடன் சிறப்புப் பிரிவு இயக்குநர் டத்தோ இப்ராஹிம் டாருஸ் மற்றும் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம்.குமார் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
அரச மலேசிய போலீஸ் படையின் முக்கிய பொறுப்புகளை ஏற்ற பின்னர், டத்தோ இப்ராஹிம் டாருஸ் மற்றும் டத்தோ எம்.குமார்" இருவரும் மாமன்னருடன் முதல் சந்திப்பை மேற்கொண்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



