ஹஜ்ஜுப் பெருநாளுக்கு 100 பசுக்களை வழங்குகிறார் மாமன்னர்
- Shan Siva
- 18 May, 2026
கோலாலம்பூர், மே 18: இந்த ஆண்டு கொண்டாடப்படவிருக்கும் ஹஜ்ஜுப்
பெருநாளை முன்னிட்டு நடைபெறும் குர்பான்) சடங்கிற்காக
100 பசுக்களைத் தனிப்பட்ட முறையில் தானமாக வழங்க மாட்சிமை தங்கிய
மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சம்மதம் தெரிவித்துள்ளார்.
சுல்தான் இப்ராஹிம்
சுல்தான் இஸ்கண்டாரின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், இன்று இஸ்தானா நெகாராவில் மத அதிகாரி டத்தோ
முனீர் முகமது சல்லேவால் வழிநடத்தப்பட்ட இந்த சடங்கிற்கான நோக்கத்தையும் மன்னர்
வெளிப்படுத்தினார்.
தனக்குப் பதிலாக பலியை
நிறைவேற்றுவதற்கான அதிகாரத்தை இஸ்தானா நெகாரா குர்பான் செயலகத்திற்கு வழங்க
சுல்தான் இப்ராஹிம் சம்மதம் தெரிவித்தார்.
பலியிடப்பட்ட இறைச்சியை இஸ்தானா நெகாரா ஊழியர்களுக்கும், அஸ்னாஃப் மற்றும் B40 குழுக்களில் உள்ளவர்களுக்கும் விநியோகிக்குமாறு மன்னர் உத்தரவிட்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



