ரஃபிஸி ரம்லிக்கு PKR கெடு!
- Shan Siva
- 28 Feb, 2026
கோத்தா பாரு, பிப் 27: PKR மத்திய தலைமை மன்றம், Rafizi Ramliக்கு கட்சியை விட்டு விலகும் நோக்கம் குறித்த தகவல்கள் தொடர்பாக விளக்கம் அளிக்க இன்று வரை அவகாசம் வழங்கியுள்ளது.
பிப்ரவரி 23ஆம் தேதி விளக்கக் கடிதம் அனுப்பப்பட்டு, முன்னாள் கட்சித் துணைத் தலைவரான ரஃபிஸிக்கு ஐந்து நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக PKR பொதுச்செயலாளர் Fuziah Salleh கூறினார்.
பொருளாதாத்துறை அமைச்சரான ரஃபிஸி, 16வது பொதுத் தேர்தல் (GE16) தொடர்பாகவும், கட்சியை விட்டு விலகும் சாத்தியம் குறித்தும் வெளியிட்ட கருத்துகள், அவர் விலகும் எண்ணத்தில் உள்ளார் என்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என ஃபூஸியா சாலேஹ் விளக்கினார்.
GE16ல் போட்டியிடுவேன் என்றும், கட்சியை விட்டு விலகும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டது, ஏற்கனவே விலகும் முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற பார்வையை உருவாக்குகிறது என்றார்.
இது தண்டனை நடவடிக்கை அல்ல என்றும், மாறாக கட்சிச் சட்டத்தின் பிரிவு 9.1(c) படி உறுப்பினரின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் முயற்சியாகும் என்றும் அவர் கூறினார்.
விளக்கம் பெறாமல் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படாது எனவும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து அடுத்த அறிவிப்பு மார்ச் 1ஆம் தேதி நடைபெறவுள்ள மத்திய தலைமைக் கவுன்சில் கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்படும் என கூறப்பட்டது.
சமீபத்தில் உள்ளூர் சீன மொழி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ரஃபிஸி, PKR ஆதரவு இல்லாவிட்டாலும் GE16ல் Pandan நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடத் தயாராக உள்ளதாகவும், கட்சிச் சின்னத்தில் அல்லாமல் நிற்பேன் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



