கட்டொழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்-டத்தோஸ்ரீ முஹாமட் காலிட் இஸ்மாயில்!
- Muthu Kumar
- 23 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 23-
மாணவி ஸாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பான வழக்கில் விதிமுறைகளை மீறியதாக விசாரணையில் கண்டறியப்பட்டால், விசாரணை அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மீது அரச மலேசிய போலீஸ் படை கட்டொழுங்கு நடவடிக்கையை மேற்கொள்ளும்.
புக்கிட் அமான் நாணயம், தர இணக்கத்துறை இவ்வழக்கிற்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவுடன் இணைந்து உள் விசாரணையைத் தொடங்கிவிட்டதாக டத்தோஸ்ரீ முஹாமட் காலிட் இஸ்மாயில் கூறினார்.சட்டம், செயல்பாட்டு தர விதிமுறை, SOP-யைப் பின்பற்றி PDRM விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக டத்தோஸ்ரீ முஹாமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
“சில நடவடிக்கைகள் கட்டொழுங்கு கண்ணோட்டத்தில் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். மேலும், எந்த அளவிற்கு விதிமீறல்கள் இருக்கிறது என்பதைப் பொறுத்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு JIPS இயக்குநரிடம் கேட்டுள்ளோம்." என்றார் அவர்.
தொடக்கத்தில் பிரேதப் பரிசோதனை விண்ணப்பத்தில் ஏற்பட்ட தாமதம், இவ்வழக்கில் எஸ்.ஓ.பிக்கு இணங்காததற்கான காரணங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



