16ஆவது பொதுத் தேர்தலில் தேமுவை சந்திக்கும் வியூகத்தை பாஸ் தற்போது கொண்டிருக்கிறது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 7-

எதிர்வரும் 16ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியை எதிர்கொள்வதற்கான வியூகங்களை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தற்போது கொண்டிருப்பதோடு, பகாங் மாநிலத்தைக் கைப்பற்றவும் அது இலக்குக் கொண்டிருக்கிறது.

கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலில் பகாங்கில் எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பெரிக்காத்தான் நேஷனல், கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த 15ஆவது பொதுத் தேர்தலில் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.கூடுதலாக இன்னும் ஐந்து தொகுதிகளை கைப்பற்றி இருந்தால், பகாங்கில் தற்போது பெரிக்காத்தான் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கும் என்று, பெர்சத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் சைஃபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

"பகாங் மாநிலத்தை பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்றக் கூடிய மிகப் பெரிய
சாத்தியத்தை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர்” என்று எஃப்எம்டியிடம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கூறிய சைஃபுடின், சிலாங்கூரிலும் அத்தகைய அரசியல் மாற்றம் நிகழக் கூடும் என்றார்.சிலாங்கூரில் மேலும் ஏழு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால், அங்கும் பெரிக்காத்தான் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கும் என்று, பகாங் மாநில பெர்சத்து தலைவருமான சைஃபுடின் தெரிவித்தார்.

இந்நிலையில், பெர்சத்து மற்றும் பாஸ் கட்சி வசமிருக்கும் பல சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளை மீண்டும் தன் வசமாக்கிக் கொள்ளும் நோக்கத்துடன், வெற்றிபெறக் கூடிய தொகுதிகளை அடையாளம் காண ஆய்வுகள் நடத்தப்படும் என்று, தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி முன்னதாகக் கூறியிருந்தார்.

பகாங் மாநிலத்தில் உள்ள மொத்தம் 42 சட்டமன்றத் தொகுதிகளில் தேசிய முன்னணி 17 இடங்களைக் கொண்டிருக்கிறது. அதன் ஒத்துழைப்பு சகாவாக இருக்கும் பக்காத்தான் ஹராப்பான் 8 தொகுதிகளை வைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து மொத்தம் 25 தொகுதிகள் பெரும்பான்மையில், பகாங் மாநிலத்தை தேசிய முன்னணி ஆட்சி புரிந்து வருகிறது.

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி புரிந்து வரும் சிலாங்கூரில் உள்ள மொத்தம் 56 சட்டமன்றத் தொகுதிகளில் அது 32 தொகுதிகளைக் கொண்டிருக்கும் வேளையில், தேசிய முன்னணி இரண்டு தொகுதிகளை மட்டுமே தன் வசம் வைத்திருக்கிறது. பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி 21 தொகுதிகளைக் கொண்டிருக்கிறது.

Perikatan Nasional yakin berpotensi menawan Pahang pada PRU16 selepas kejayaan besar dalam PRU15. Saifuddin Abdullah nyatakan perubahan politik juga mungkin berlaku di Selangor. PN kini giat mengenal pasti kerusi berpotensi menang untuk perkuat strategi hadapi Barisan Nasional.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *