ஊழலை எதிர்த்துப் போராடுவதில் MACC சிறப்பாக செயல்படுகிறது - Asalina othman

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 11:

2020 முதல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-ஆல் மொத்தம் 3,630 அரசு ஊழியர்கள், தனியார் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பல்வேறு குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் துறை சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்த அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில், லஞ்சம் பெற்றதற்காக 1,945 பேர் கைது செய்யப்பட்டதாகவும், லஞ்சம் கொடுத்ததற்காக 384 பேரும், அதிகார துஷ்பிரயோகத்திற்காக 341 பேரும், பொய்யான கூற்றுக்களுக்காக 720 பேரும், பணமோசடிக்காக 44 பேரும் மற்றும் பிற குற்றங்களுக்காக 196 பேரும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.பொதுமக்களிடையே, லஞ்சம் பெற்றதது உட்பட பல்வேறு குற்றங்களுக்காக 1,705 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

மொத்தத்தில், ஊழல் தொடர்பான மற்றும் ஊழல் அல்லாத குற்றங்களை உள்ளடக்கிய 36,937 அறிக்கைகளை MACC பெற்றதாக அவர் கூறினார்.அதே காலகட்டத்தில், MACC மொத்தம் 6,135 கைதுகளை நடத்தியது, இதன் விளைவாக 2,604 குற்றச்சாட்டுகள் மற்றும் 1,321 பேர் தண்டனை பெற்றனர்.ஊழலை எதிர்த்துப் போராடுவதில் MACC இன் செயல்திறன் குறித்து (PH-Gopeng)  டான் கார் ஹிங் கேட்ட கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *