மீனவரைக் காணவில்லை... முதலைத் தாக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது

top-news
FREE WEBSITE AD

சண்டகான், ஜூலை 15: சபா, சண்டகான் பத்து 7, தாமான் கெனாரி அருகே உள்ள ஆற்றில் நேற்று மாலை ஒரு மீனவர் முதலையால் தாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

கம்போங் பத்து புதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஓபிங் மார்கம் என்ற நபர் மாலை 4 மணியளவில் தனது மீன்பிடி வலையை வீச ஆற்றுக்குச் சென்றதாக நம்பப்படுகிறது.

சுமார் இரண்டு மணி நேரம் கழித்து, கிராமவாசிகள் அவரது படகில் முதலை கடித்த அடையாளங்கள் மாதிரி சில தடயங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவரைத் தேடுவதற்காக நேற்று இரவு இரண்டு படகுகளில் கிராம மக்கள் புறப்பட்டதாகவும், ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8.50 மணிக்கு சம்பவம் குறித்து போலீசாரிடமிருந்து நிலையத்திற்கு அழைப்பு வந்ததாக சண்டகன் தீயணைப்பு நிலையத் தலைவர் ஜிம்மி லகுங் தெரிவித்தார்.

தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள ஐந்து பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.

உள்ளூர் பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் சமூக உறுப்பினர்களின் உதவியுடன் இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *