கம்போடியாவில் விஷ்ணு சிலை உடைப்பு!

top-news
FREE WEBSITE AD

கம்போடியாவில் விஷ்ணு சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் தாய்லாந்து நாட்டிற்கு இந்தியா கண்டனம் தெரிவித்து இருந்தது.இந்த நிலையில், இதற்கு விளக்கம் அளித்துள்ள தாய்லாந்து இடிக்கப்பட்ட அந்த சிலை பதிவு செய்யப்பட்ட மத வழிபாட்டு தலமாக இல்லை. பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அந்த இடத்தை மேலாண்மை செய்வதற்காகவும் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளது.

பௌத்த, இந்து மதத்தினரால் இந்த சிலை வணங்கப்பட்டு வந்தது. அப்படி இருக்கும்போது இதை இடித்ததை ஏற்க முடியாது. வன்மையாக கண்டிக்கிறோம் என கம்போடியாவும் கூறியிருந்தது.

தென் கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையே எல்லை பிரச்சினை நிலவுகிறது. எல்லையில் இரு நாட்டு ராணுவம் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இரு நாட்டு படைகளும் மூர்க்கத்தனமாக மோதிக்கொண்டன.

இருநாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும் சூழல் ஏற்பட்ட நிலையில், அமெரிக்கா தலையிட்டு பதற்றத்தை தணித்தது. இருந்தாலும் அவ்வப்போது இருநாடுகளுக்கும் இடையே உரசல்கள் நீடித்து வருகின்றன. இந்த சூழலில்தான், கடந்த சில வாரங்களாகவே தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே மோதல் அதிகரித்து வருகிறது.

இரு தரப்புமே எல்லையில் மாறி மாறி தாக்குதல் நடத்துவதால், எல்லையில் இருக்கும் கிராம மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இரண்டு வாரத்திற்கும் மேலாக நீடித்து வரும் இந்த மோதலால், இதுவரை 86 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு மத்தியில், எல்லையில் கம்போடியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியை தாய்லாந்து மீட்டது.

தங்களுக்கு சொந்தமான இடம் என உரிமை கோரி வந்த தாய்லாந்து, கம்போடியாவிடம் இருந்து குறிப்பிட்ட அந்த இடத்தை மீட்டதும், அப்பகுதியில் இருந்த விஷ்ணு சிலை ஒன்றை இடித்தது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இரு நாடுகளிடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த விஷ்ணு சிலை, தாய்லாந்து எல்லையிலிருந்து சுமார் 100 மீட்டர் (328 அடி) தொலைவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. பௌத்த, இந்து மதத்தினரால் இந்த சிலை வணங்கப்பட்டு வந்தது. அப்படி இருக்கும்போது இதை இடித்ததை ஏற்க முடியாது. வன்மையாக கண்டிக்கிறோம் என்று கம்போடியா கூறியிருந்தது.

விஷ்ணு சிலை இடிக்கப்பட்டதற்கு இந்தியாவும் தனது எதிர்ப்பை பதிவு செய்தது. உலகெங்கிலுமுள்ள பக்தர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இந்த செயல் இருப்பதாகவும், இத்தகைய அவமரியாதை செயல்கள் நடப்பதை ஏற்க முடியாது என்றும் கூறியிருந்தது.

இந்தியா தனது கவலையை பதிவு செய்து இருந்த நிலையில், தாய்லாந்து இது தொடர்பாக விளக்கம் ஒன்றினை அளித்துள்ளது. தாய்லாந்து அதிகாரிகள் இது தொடர்பாக கூறியிருப்பதாவது, இடிக்கப்பட்ட அந்த சிலை பதிவு செய்யப்பட்ட மத வழிபாட்டு தலமாக இல்லை. பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அந்த இடத்தை மேலாண்மை செய்வதற்காகவும் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறியுள்ளது.

இது தொடர்பாக தாய்லாந்து தரப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, மத நம்பிக்கைகள் மற்றும் புனிதமான இடங்களை அவமதிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அப்பகுதியை மேலாண்மை செய்வதற்காகவும் பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே மேற்கூறிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. தாய்லாந்து இறையாண்மையை நிலைநிறுத்தும் நோக்கத்தில் கம்போடியா கட்டுப்பாட்டில் இருந்த இடம் மீட்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *