இஸ்லாத்தைக் காக்கும் தலைவர்கள் இல்லை! – HADI AWANG
- Thinagaren Sanggaren
- 20 Jul, 2025
ஜூலை 20,
மலேசியாவில் இஸ்லாத்தைக் காக்கும் தலைவர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டிருப்பதாகப் பாஸ் கட்சியின் தலைவர் Tan Sri Abdul Hadi Awang கருத்து தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் ஆட்சி அதிகாரம் கொண்டிருக்கும் தலைவர்கள் நினைத்தால் எதையும் செய்யலாம் என மனப்போக்கைக் கொண்டிருப்பதாகவும் ஆனால் அவர்கள் இஸ்லாத்திற்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்காமல் மெளனமாக இருப்பதாகவும் Tan Sri Abdul Hadi Awang தெரிவித்தார்.
தகுதியற்ற நபர்களிடம் அதிகாரங்களை ஒப்படைக்கும்
போது மதக் கொள்கைகள் புறக்கணிக்கப்படும் என்றும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல்
மெத்தனமாக இருக்கும் அரசியல்வாதிகள் துரோகிகள் என மக்கள் அடையாளம் கண்டுக்கொள்ள வேண்டும்
என்றும் Tan Sri Abdul Hadi Awang தெரிவித்தார். தலைமைத்துவம் என்பது இஸ்லாத்தைப்
பின்பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் பாஸ் கட்சி உறுதியாக இருப்பதாக Tan
Sri Abdul Hadi Awang வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



