அரசியலை விட்டு நான் விலகமாட்டேன்! – முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி!
- Thinagaren Sanggaren
- 01 Oct, 2025
அக்தோபர் 1,
முன்னாள் பிரதமராக இருந்த போது என்னுடைய நடவடிக்கைகள் எப்படி இருந்ததோ அப்படி தான் இப்போதும் இருக்கிறேன் என முன்னாள் பிரதமரும் BERA நாடாளுமன்ற உறுப்பினருமான Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்துள்ளார். நான் பெரிதாக எதற்கும் உணர்ச்சிப்படுபவன் அல்ல, அதனால் நான் அமைதியாக இருப்பதாகத் தென்படுகிறது என Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார். அம்னோவின் உயர்ந்த பொறுப்பிலும் நாட்டின் உயர்ந்த பொறுப்பிலும் நான் இருந்துவிட்டேன் என்பதற்காக எதையாவது சொல்லிக் கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை என Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
நான் அம்னோக்காரன். இப்பவும் எப்பவும் நான் அம்னோக்காரன் தான் என்பதில் மாற்றமில்லை என்றும் அம்னோவிலிருந்து விலகுவது குறித்து எந்தவொரு சிந்தனையும் இல்லை என்றும் Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார். முன்னாள் பிரதமர் என்கிற அடையாளம் எனக்கு உள்ளது என்பதற்காக இப்போதைய பிரதமரையும் ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள் குறித்தும் கருத்து தெரிவிப்பது அவசியமற்றது. ஒவ்வொரு தலைவருக்கும் அவர்களுக்கான தனித்துவத்தில் அந்த துறையை வழிநடத்துகிறார்கள். மக்களுக்குப் பயனளிக்கிறதா என்பதை மட்டுமே நாம் சிந்திக்க வேண்டும் என Datuk Seri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



