ம.இ.கா அம்னோ அல்லது பாரிசானின் எதிரிகள் அல்ல! தகாத அறிக்கை வேண்டாம்! - விக்னேஸ்வரன் வேண்டுகோள்
- Shan Siva
- 21 Nov, 2025
கோலாலம்பூர், நவ 21: மஇகா அம்னோ அல்லது பாரிசான் நேஷனல் (பிஎன்) உடன் எதிரிகள்
அல்ல என்று அதன் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் இன்று கூறினார். எனவே, பாரிசானில் மஇகாவின் எதிர்காலம்
குறித்து மேலும் அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு தனது சக கட்சித்
தலைவர்களை அவர் வலியுறுத்தினார்.
மஇகா பாரிசானில் இருந்து
வெளியேற வேண்டும் என்ற கட்சி உறுப்பினர்களின் நோக்கம் கட்சியின் எதிர்காலத்திற்காக
என்றும் விக்னேஸ்வரன் கூறினார்.
ஒரு முடிவு
எடுக்கப்பட்டால், மஇகா யாரையும்
அச்சுறுத்துகிறது என்று அர்த்தமல்ல. மஇகா ஒருபோதும் அப்படி இருந்ததில்லை, யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கமும்
இல்லை என்று சினார் ஹரியன் இன்று அவர் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.
மஇகாவின் வியூக இயக்குநர்
சி. சிவராஜ், பாரிசானின் இந்திய ஆதரவு சரிவுக்கு அம்னோ
ஆட்சியில் இருந்தபோது எடுத்த முடிவுகளே உண்மையான காரணம் என்று தெரிவித்திருந்ததை அடுத்து
விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதனிடையே புதன்கிழமை, மஇகாவின் தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, மஇகா அதன் எதிர்காலம் குறித்து எடுக்கும் எந்த
முடிவையும் ஏற்றுக்கொள்வதாக கூறினார்.
நவம்பர் 29 ஆம் தேதி சபா தேர்தலுக்குப் பிறகு கூட்டணியில்
கட்சியின் எதிர்காலத்தை தெளிவுபடுத்துவதற்காக பாரிசான் மற்றும் ம.இ.கா
கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பாரிசான் துணைத் தலைவர் முகமது ஹசான் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனை ஜாஹிட்டும் வரவேற்றுள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



