இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பிரான்ஸ் நாட்டிற்குள் நுழைய தடை

top-news
FREE WEBSITE AD

பாரிஸ், மே 25-

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் Itamar Ben-Gvir-க்கு பிரான்ஸ் அரசு தனது நாட்டுக்குள் நுழைய தடை விதித்துள்ளது. காசாவுக்குச் செல்ல முயன்ற மனிதாபிமான குழுவினரிடம் அவர் நடந்து கொண்ட விதம் சர்வதேச கண்டனத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் Jean-Noel Barrot தனது சமூக வலைதள பதிவில், “இன்று முதல் Itamar Ben-Gvir பிரான்ஸ் நாட்டுக்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளார்” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும், ஐரோப்பிய ஒன்றியமும் அவருக்கு எதிராக தடைகள் விதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, காசாவுக்கு மனிதாபிமான உதவிகளைக் கொண்டு செல்ல முயன்ற Global Sumud Flotilla குழுவினரை இஸ்ரேல் கடற்படை சர்வதேச கடற்பரப்பில் தடுத்து நிறுத்தியது. பின்னர் கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்கள் மீது அவமரியாதையான முறையில் நடந்து கொண்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த செயற்பாட்டாளர்களைக் கேலி செய்யும் வகையில் Ben-Gvir வெளியிட்ட காணொளி உலக நாடுகளின் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

பிரான்ஸ் மட்டுமின்றி இத்தாலி, ஸ்பெயின், போலந்து உள்ளிட்ட பல நாடுகளும் இந்த சம்பவத்தைக் கண்டித்துள்ளன. சில நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய அளவிலான தடைகள் குறித்து ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *