இஸ்ரேலைக் கண்டித்து நாடாளுமன்றதில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்! – பாஸ் கட்சி வலியுறுத்து!
- Thinagaren Sanggaren
- 05 Oct, 2025
அக்தோபர் 5,
இஸ்ரேலிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் 23 மலேசியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டாலும் இஸ்ரேலுக்கு மலேசியா வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என பாஸ் கட்சியின் பொதுச்செயலாளர் Takiyuddin Hassan வலியுறுத்தினார். இஸ்ரேலுக்கு எதிராக மலேசிய அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் Takiyuddin Hassan வலியுறுத்தினார்.
Global Sumud Flotilla மூலமாக உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற 23 மலேசியர்கள் இஸ்ரேலிய ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளது சர்வதேச அளவில் மலேசியாவின் நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் இந்த தீர்மானம் அவசியம் என Takiyuddin Hassan தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான மலேசியா இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட்டதில்லை என்றாலும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையால் மலேசியா இன்னும் அமைதியாக இருக்க கூடாது என Takiyuddin Hassan தெரிவித்தார். நாம் வலுவான ஓர் எதிர்ப்பை இஸ்ரேலுக்குக் காட்ட வேண்டும் என Takiyuddin Hassan அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



