பெரிக்காத்தான் நேஷனலின் கீழ் மஇகா, மசீசவுடன் சேர்ந்து பணியாற்ற பாஸ் தயார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 6-

பெரிக்காத்தான் நேஷனலின் உச்சத் தலைமைத்துவம் அனுமதியளித்தால், அக்கூட்டணிக்குள் மஇகா மற்றும் மசீசவுடன் சேர்ந்து பணியாற்றும் தனது விருப்பத்தை பாஸ் கட்சி வெளிப்படுத்தி இருக்கிறது. ஜசெகவைத் தவிர்த்து, வேறு எந்த கட்சியுடனும் சேர்ந்து பணியாற்றுவதில் கொள்கை ரீதியில் பாஸ் கட்சிக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்று. அதன் ஆன்மிகத் தலைவர் ஹஷிம் ஜாசின் கூறியுள்ளார்.

"இந்த ஒத்துழைப்பு நனவாக வேண்டுமென்றால், பெரிக்காத்தான் நேஷனலின் உயர்மட்டத் தலைமைத்துவத்துடன் முதலில் கலந்து பேச வேண்டியிருக்கிறது என்று. ஹஷிம் கூறியதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த பொதுத் தேர்தலுக்காக கூட்டணியை மேலும் வலிமைப்படுத்த இதர கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள பெரிக்காத்தான் நேஷனல் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டு அரசியல் அரங்கில் மஇகா தொடர்ந்து நிலைத்திருப்பதை உறுதிப்படுத்த எந்த ஓர் அரசியல் கட்சியுடனும் கலந்துபேச கட்சி தயாராக இருப்பதாக, கடந்த சனிக்கிழமை, அதன் தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார்.

மஇகா பலவீனமான சூழ்நிலையில் இருப்பதை ஒப்புக் கொண்டதோடு, கட்சிக்கு மீண்டும் புத்துயிர் அளிப்பதற்கான "நியாயமான நடவடிக்கைகளை" அது அவசியம் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்பதால், இதர கட்சிகளுடன் பேச்சு நடத்த மஇகா தயாராக இருப்பதாக அவர் கூறியிருந்தார்.

தேசிய முன்னணி கூட்டணியில் தொடர்ந்து நீடித்திருக்கும் வரையில், மஇகாவின் எதிர்காலம் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்று. தேசிய முன்னணி மற்றும் அம்னோ தலைவருமான டத்தோ ஸ்ரீ அமாட் ஸாஹிட் ஹமிடி அண்மையில் வலியுறுத்திக் கூறியிருந்தார். முன்னாள்

பிரதமர்களான டான் ஸ்ரீ முஹிடின் யாசின் மற்றும் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஆகியோர் தலைமையிலான அரசாங்கங்களில் ஓர் அங்கமாக மஇகா முன்பு இருந்ததை சுட்டிக் காட்டி,பெரிக்காத்தான் நேஷனலுடனான அக்கட்சியின் ஒத்துழைப்பு "புதியது அல்ல" என்பதை, பாஸ் கட்சியின் முஸ்லிம் அல்லாத ஆதரவாளர்கள் பிரிவின் தகவல் பிரிவுத் தலைவர் பாலசந்திரன் கிருஷ்ணன் மஇகாவுக்கு நேற்றுமுன்தினம் திங்கள்கிழமை நினைவூட்டி இருந்தார்.

இந்நிலையில், சுட்சிக்குத் துணைப் பிரதமர் பதவி வழங்க முன்வந்த போதிலும், ஒற்றுமை அரசாங்கத்தில் இணையுமாறு விடுக்கப்பட்ட எந்த ஓர் அழைப்பையும் பாஸ் நிராகரித்து விட்டதாக, ஆராவ் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான ஹஷிம் தெரிவித்தார்.

துணைப்பிரதமர் பதவி வழங்கப்படக் கூடிய சாத்தியம் இருப்பதால், அன்வார் இப்ராஹிமின் நிர்வாகத்தை ஆதரிப்பதுதான் பாஸ் கட்சிக்கு நல்லதாக இருக்கும் என்று. பிகேஆர் கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்ற உறுப்பினர் மஸ்லி மாலேக் கூறியதாக மலேசியாகினி அண்மையில் வெளியிட்டிருந்த செய்தி குறித்து ஹஷிம் இவ்வாறு பதிலளித்தார்.

"ஜசெக ஓர் அங்கமாக இருக்கும் வரையில் ஒற்றுமை அரசாங்கத்தில் நாங்கள் சேரமாட்டோம். கடந்த காலத்தில் ஜசெகவுடன் நாங்கள் பல்வேறு எதிர்மறையான அனுபவங்களைப் பெற்றிருக்கின்றோம். எனினும், அம்னோவுடன் ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். இதன் தொடர்பான பேச்சுகளுக்கான சுதவை நாங்கள் மூடியதும் கிடையாது"என்று ஹஷிம் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *