சரவாக் மீரியில் காணாமல் போன முதியவர் பிணமாக மீட்பு!
- Shan Siva
- 22 Sep, 2025
மீரி, செப் 22:சரவா, மீரி, பத்து நியாவில்
உள்ள செபுபோக் பகுதியில் ஒரு வாரத்திற்கும் மேலாக காணாமல் போன முதியவரின் உடல்
நேற்று இரவு அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
சராவாக்
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையம், 77 வயதான சோங் நியுக் ஃபேன் என்பவரின் உடல், கைவிடப்பட்ட நான்கு சக்கர வாகனத்தின் அருகே
கண்டுபிடிக்கப்பட்டதாகக் தெரிவித்தது.
சோங் காணாமல்
போனதாக நேற்று இரவு 9.18 மணிக்கு தகவல்
கிடைத்ததாகத் துறை தெரிவித்துள்ளது.
தீயணைப்பு
வீரர்கள் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவரின்
வாகனத்திலிருந்து 50 மீ சுற்றளவில்
ஒரு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் 20 நிமிடங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்
சாலையோரத்தில் உள்ள உயரமான புல்வெளியில் அழுகிய நிலையில் காணப்பட்டதைக்
கண்டுபிடித்ததாக அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக குடும்ப
உறுப்பினர்கள் அந்தப் பகுதியைத் தேடியும் எந்த பலனும் இல்லை. இதனால்
முதியவரைக் கண்டுபிடிப்பதில் உதவி கோரி காவல்துறையில் புகார் அளித்ததாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



