காணாமல் போன சிறுமி அழுகிய சடலமாக மீட்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 17: திங்களன்று காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்ட 11 வயது சிறுமியின் அழுகிய சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொலை விசாரணைக்கு உதவுவதற்காக இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

செபாங்காரில் உள்ள கம்போங் நும்பாம் என்ற இடத்தில், பாதி கட்டி முடிக்கப்பட்ட ஒரு வீட்டிற்கு அருகிலுள்ள புதரில், நேற்று இரவு பொதுமக்களில் ஒருவர் பாதிக்கப்பட்டவரின் சடலத்தைக் கண்டெடுத்ததாக கோத்த கினபாலு தற்காலிக போலிஸ் தலைவர் சைத் லாட் சைத் அப்துல் ரஹ்மான் கூறினார்.

காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டபோது பாதிக்கப்பட்ட சிறுமி அணிந்திருந்த ஆடைகளின் அடிப்படையில், அவரது தாயார் பின்னர் அவரை அடையாளம் கண்டார் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் தலையில் ஏற்பட்ட பலத்த அடியால் இறந்ததாக தடயவியல் நிபுணர்கள் நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.

விசாரணையைத் தொடர்ந்து, 39 மற்றும் 42 வயதுடைய இரண்டு பேர் விசாரணைக்கு உதவுவதற்காகக் கைது செய்யப்பட்டனர். இருவரும் நாளை நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

காவல்துறை இந்த வழக்கை கொலை வழக்காக விசாரித்து வருகிறது. கொலைக்கான நோக்கம் இன்னும் விசாரணையில் உள்ளது.

பெர்னாமா தகவலின்படி, பாதிக்கப்பட்டவர் 11 வயதான நூர்ஜில்யா அப்துல்லா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *