காணாமல் போன இங்கிலாந்து ஆடவன் அம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டான்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 6: மூன்று மாதங்களாக காணாமல் போன பின்னர் கோலாலம்பூர், ஜாலான் புடவில் உள்ள ஒரு ஹோட்டலில் கண்டுபிடிக்கப்பட்ட பதினேழு வயது பிரிட்டிஷ் ஆடவர் டேவிட் பாலிசோங் இன்று இங்கிலாந்து திரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலிசோங் நேற்று தனது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் வழக்கு முடிவடைந்ததாகக் கருதப்படுவதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஷாசெலி கஹார் தெரிவித்ததாக உத்துசான் மலேசியா தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் (காவல்துறை) விசாரணையில் எந்த குற்றவியல் அல்லது தவறான நடத்தை கூறுகளும் இல்லை. போலீசார் விசாரணையை முடித்த பின்னர் அவ்வாடவர் அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டார்  என்று அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது.

கோலாலம்பூர் காவல்துறை தலைமையகத்தைச் சேர்ந்த ஒரு குழுவினரால் பாலிசோங் வியாழக்கிழமை இரவு கண்டுபிடிக்கப்பட்ட்டார்.

ஜூன் 6 ஆம் தேதி இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள சீடில் உள்ள தனது வீட்டிலிருந்து அவர்  காணாமல் போனார், பின்னர் ரகசியமாக மலேசியாவுக்கு ஒரு வழி விமானத்தில் ஏறி வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அவர் தனது தொலைபேசியை அணைத்துவிட்டு மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். இதனை அடுத்து அவரைத் தேடும் நடவடிக்கை தொடங்கியது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *