ஜொகூர் 11 பெர்சாத்து கிளைகள் கலைப்பு!

top-news
FREE WEBSITE AD

குளுவாங், பிப் 18: ஜொகூரில்  உள்ள  11 பெர்சாத்து கிளைகள் கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள உள் நெருக்கடியைத் தொடர்ந்து கலைக்கப்படுவதாக இன்று அறிவித்தன.

பொந்தியான், சிம்பாங் ரெங்காம், செம்ப்ராங், மெர்சிங், ஜொகூர் பாரு, பெங்கெராங், லாபிஸ், தஞ்சோங் பியா, ஸ்ரீ காடிங், லெடாங் மற்றும் பூலாய் ஆகிய கிளைகள் கலைக்கப்பட்டுள்ளன.

கிளைத் தலைவர்களின் பிரதிநிதியால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பெர்சாத்து பொந்தியன் தலைவர் டத்தோ இசா அப்துல் ஹமீத், கட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் விவேகத்துடன் கையாளத் தவறிய தலைமை நெருக்கடி மோசமடைந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.

ஒவ்வொரு பிரிவின் குழு உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்ததால் தலைமைத்துவ கட்டமைப்புகள் செயல்படாத நிலையில் கலைக்கப்பட்டதாக இசா கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *