கணவரைத் தாக்கிய மனைவிக்கு RM 150 அபராதம்!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 11, 

கணவரை மூங்கில் குச்சியால் தாக்கி காயப்படுத்திய மனைவிக்கு இன்று பாலிக் புலாவ் நீதிமன்றம் RM 150 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. திருமணத்திற்குப் பின்னர் 12 ஆண்டுகளாகத் தனது கணவர் மீதானக் கோபத்தைக் கட்டுப்படுத்தி வந்ததாகவும் கடந்த ஜூலை 4 ஏற்பட்ட வாக்குவாதத்தால் கோபமடைந்து தனது கணவரை மூங்கில் குச்சியால் தாக்கியதாக 37 வயதான Yang Khalida Khalid எனும் பெண் ஒப்புக்கொண்டுள்ளார். இச்சம்பவம்  Taman Emas, Teluk Kumbar பகுதியில் உள்ள அவர்களின் வீட்டு வாசலில் நிகழ்ந்ததாகவும் அருகில் இருந்த குடியிருப்புவாசிகள் காவல்துறையில் புகார் அளித்ததாகவும் தெரிய வந்துள்ளது.


பாதிக்கப்பட்ட 48 வயதான Mohd Nasir Abdul Halim எந்தவொரு மேல்முறையீடும் செய்யாத நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 37 வயதான Yang Khalida Khalid எனும் பெண்ணுக்குக் குறைந்தபட்ச தண்டனையை வழங்குவதாகவும் குடும்ப விவகாரங்களின் போது வன்முறையைக் கையாள வேண்டாம் என கணவன் மனைவி இருவருக்கும் இந்த நீதிமன்றம் அறிவுருத்துவதாக நீதிபதி Chia Huey Ting உத்தரவிட்டார். சம்மந்தப்பட்ட இருவருக்கும் குடும்ப நலத் துறையின் கவுன்சிலிங்கை ஏற்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 48 வயதான கணவருக்கு ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் சிகிச்சைக்குப் பின்னர் கவுன்சிலிங்கை மேற்கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *