அம்னோவை வெளியேற்ற DAP முயற்சி! - புவாட் சர்காஷி பகிரங்க குற்றச்சாட்டு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 26: பிரதமர் அன்வார் இப்ராஹிமின் அரசாங்கத்திலிருந்து அம்னோவை சில டிஏபி தலைவர்கள் வெளியேற்ற விரும்புவதாக அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் புவாட் சர்காஷி குற்றம்சட்டியுள்ளார்

நஜிப் ரசாக்கின் ஆறு ஆண்டு சிறைத்தண்டனையின் மீதமுள்ள காலத்தை வீட்டுக் காவலில் அனுபவிக்கும் முயற்சியை உயர்நீதிமன்றம் நிராகரித்தற்கு டிஏபி தலைவர்களின் எதிர்வினையைக் குறிப்பிட்டு, ஒற்றுமை அரசாங்கத்தின் மீது முட்டுக்கட்டை போட  அம்னோ உறுப்பினர்களை வலியுறுத்த அவர்களில் சிலர் முயற்சிப்பதாக புவாட் சுட்டிக்காட்டினார்.

இந்த டிஏபி தலைவர்கள் மலேசியாவை ஒரு தாராளவாத நாடாக மாற்றுவதற்கான அவர்களின் பெரிய திட்டமிடலுக்கு அமைச்சரவையில் ஒரு தடையாக அம்னோவைப் பார்க்கிறார்கள் என்று புவாட் கூறினார்.

டிஏபி மோசமான கட்சியாகக் கருதப்படக்கூடாது என்பதற்காக அம்னோ தானாக முன்வந்து அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று இந்தத் தலைவர்கள் விரும்புகிறார்கள். அம்னோ வெளியேறினால் அரசாங்கம் வீழ்ந்துவிடும் என்றெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை என்று அவர் ஒரு பேஸ்புக் பதிவில் கூறினார்.

நஜிப்பின் வீட்டுக் காவல் முயற்சியில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை  கொண்டாடியதற்காக  பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பீ யின் மற்றும்  டாமன்சாரா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா போன்றவர்கள் மன்னிப்பு கேட்க வாய்ப்பில்லை என்று கூறினார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த கொண்டாட்ட சமூக ஊடகப் பதிவுகளுக்காக கட்சித் தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி உட்பட எண்ணற்ற அம்னோ தலைவர்களிடமிருந்து யோ மற்றும் புவா கடுமையான கண்டனங்களைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *