சிலாங்கூரில் கோயில்களுக்கு எதிராக 300 அமைப்புகள் ஊர்வலம்!
- THINAGAREN SANGGAREN
- 01 Mar, 2026
மார்ச் 1,
சிலாங்கூரில் அரசு அல்லது தனியார் நிலங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருக்கும் கோயில்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடு முழுவதுமுள்ல 300 அமைப்புகள் ஒன்றிணைந்து செலாயாங் நகராண்மைக் கழகத்தில் மகஜர் வழங்கியுள்ளனர். செலாயாங் நகராண்மைக் கழகத்தின் நுழைவாயலுக்குள் போராட்டக்காரர்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாகவும் நகராண்மைக் கழகத்தின் செயலாளர் மகஜரைப் பெற்றுக் கொண்டு, கூட்டத்தைக் கலைக்கும்படியும் வலியுறுத்திய பின்னர் அந்த கூட்டம் அடுத்ததாகக் கோம்பாக் காவல் நிலையத்தில் கோயில்களுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 300 அமைப்புகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவளித்திருப்பதாகவும் நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் கோயில்களை அப்புறப்படுத்த நகராண்மைக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோயில்களை இடிக்க நகராண்மைக் கழகத்திற்கு அதிகாரிகள் பற்றாக்குறையாக இருந்தால் 300 அமைப்புகளின் தொண்டூழியர்களை நகராண்மைக் கழகத்திற்கு நாங்கள் வழங்குகிறோம் என கோயில்களுக்கு எதிராகச் செயல்படும் FIRDAUS WONG தெரிவித்துள்ளார்.
மகஜரைப் பெற்றுக்கொண்ட செலாயாங் நகராண்மைக் கழகம் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கவில்லை என கோயில்களுக்கு எதிராகச் செயல்படும் FIRDAUS WONG தெரிவித்தார். செலாயாங் நகராண்மைக் கழகத்தின் நுழைவாயிலில் கூட எங்களை அனுமதிக்கவில்லை. நாங்கள் கோஷமிடக் கூடாது என செலாயாங் நகராண்மைக் கழகத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர் என FIRDAUS WONG தெரிவித்தார். எங்கள் மகஜரை நாங்கள் வழங்குவதற்காக செலாயாங் நகராண்மைக் கழகத்திற்கு வருகிறோம் என முன் அறிவிப்பையும் நாங்கள் வழங்கியிருந்தோம், ஆனாலும் நகராண்மைக் கழகத்தினர் எந்தவொரு பதிலையும் எங்களுக்கு வழங்கவில்லை என்றாலும் கோம்பாக் காவல்துறையினர் எங்கள் புகாரைப் பெற்றுக்கொண்டதாக FIRDAUS WONG தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



