அன்வார் கோயில் விவகாரத்தில் சொன்னதை மீட்டுக்கொள்ள வேண்டும்! – Ambiga Sreenevasan!
- THINAGAREN SANGGAREN
- 18 Feb, 2026
பிப்ரவரி 18,
முறையான அனுமதியின்றி அமைக்கப்பட்டிருக்கும் கோயில்களைச் சுத்தம் செய்ய வேண்டும் என பிரதமர் அன்வார் கூறியிருக்கும் கருத்தை அவர் மீட்டுக்கொள்ள வேண்டும் என வழக்கறிஞரான Ambiga Sreenevasan வலியுறுத்தினார். அன்வாரி இந்த கருத்து பலரையும் உணர்ச்சிவசப்பட வைத்திருப்பதாகவும் கோயில்களுக்கு எதிரானக் கருத்துகளைப் பரப்பும் குழுவினருக்கு ஆதரவாக இருப்பதால் அன்வார் அவர் சொன்ன கருத்தை மீட்டுக்கொள்ள வேண்டும் என Ambiga Sreenevasan தெரிவித்துள்ளார்.
கோயில் விவகாரங்களில் அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதற்கான முறையான அணுகுமுறைகள் இருக்க வேண்டும் என Ambiga Sreenevasan வலியுறுத்தினார்.
அன்வார் அரசு நிகழ்ச்சியில் இப்படியான கருத்தை வெளியிடும் முன்னர் சம்மந்தப்பட்ட அரசு
இலாகாவில் இது குறித்தான தெளிவான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். சுமூகமான ஒரு தீர்வை எதிர்நோக்கி நாம் செயல்பட ஒரு குழுவை அமைத்த பின்னர்
இந்த கோயில் விவகாரங்கள் குறித்து பிரதமர் கருத்து தெரிவித்திருக்க வேண்டும் என Ambiga
Sreenevasan தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



