கோயிலை இடிப்பது சாதாரண விசயம்! மகாதீரின் முன்னாள் வழக்கறிஞர் Haniff Khatri!

top-news
FREE WEBSITE AD

பிப்ரவரி 18,

கோயில்களைச் சுத்தம் செய்ய வேண்டும் என பிரதமர் அன்வார் சொன்னதில் எந்தவொரு தவறும் இல்லை என்றும் கோயில் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியமில்லை என்றும் சட்டவிரோதக் கோயில்களுக்கு எதிராக அமைக்கப்பட்டிருக்கும் GARAH அமைப்பின் தலைவரும் மகாதீரின் முன்னாள் வழக்கறிஞருமான Haniff Khatri தெரிவித்துள்ளார். அன்வார் வெளியிட்டிருக்கும் கருத்து நியாயமானது என்பதால் அவருடைய கருத்தை மீட்டுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் வழக்கறிஞர் Ambiga Sreenevasan சொல்வது போல கோயில்களைப் பராமரிக்கும் பொறுப்பு பிரதமருடையது அல்ல என்றும் Haniff Khatri தெரிவித்தார்.

மற்றவருக்குச் சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருக்கும் கோயில்களை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்கிற எந்தவோர் அவசியமும் இல்லை என Haniff Khatri வலியுறுத்தினார். நில உரிமையாளரின் அனுமதியில்லாம அவருடைய சொந்த நிலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு கட்டுமானத்தலத்தை அவர் இடிக்கிறார். இதை இன விவகாரமாகவும் இரு சமயங்களுக்கு இடையிலானச் சர்ச்சையாகவும் ஒரு சில தரப்பினர் கருதுவதால் இந்து நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கும் அளவிற்குப் பேசப்படுகிறது. இது ஒரு சாதாரண விசயம். இதை சர்ச்சையாக்கி ஒரு கூட்டம் அரசியல் செய்கிறது என Haniff Khatri தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *