கோயிலை இடியுங்கள்! மக்களைக் குழப்பாதீர்! Zamri Vinoth சாடல்
- THINAGAREN SANGGAREN
- 22 Feb, 2026
பிப்ரவரி 22,
நில உரிமையாளரின் அனுமதியில்லாமல் அமைக்கப்பட்டிருக்கும் கோயில்களுக்கு எதிரான எங்கள் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கும் முன்னர் சட்டத்தை அறிந்திருக்க வேண்டும் என Zamri Vinoth தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் அம்பிகா சிரினிவாசன் சர்ச்சைக்குரிய கோயில்களைப் பாதுகாக்க முயற்சித்தால் அவருடைய சொந்த நிலத்தைக் கோயில்களுக்கு வழங்க முன்வர வேண்டும் என Zamri Vinoth தெரிவித்துள்ளார்.
முன்னதாக வழக்கறிஞர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கோயில்கள் என்பது ஒரு சமூகத்தின் நம்பிக்கை என்றும் நில உரிமையாளருக்கும் கோயில் நிர்வாகத்திற்குப் புரிந்துணர்வில்லை எனில் நீதிமன்றத்தின் மூலமாக எந்தவொரு சமூகத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சமூகமாகத் தீர்வு எடுக்கப்பட வேண்டும் என வழக்கறிஞர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வலியுறுத்தினார். ஆண்டி அம்பிகா, உண்மையிலேயே நீங்கள் சட்டம் படித்தீர்களா என Zamri Vinoth கேள்வி எழுப்பினார். நிலத்தின் உரிமையாளர் அவருடைய நிலத்தில் அவருடைய அனுமதியின்றி கட்டப்பட்ட கோயிலை இடிக்க ஏன் நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும்? கோயிலை இடிப்பதற்கும் நீதிமன்றத்திற்கும் எந்தவோர் தொடர்பும் இல்லை என zamri vinoth வழக்கறிஞர் அம்பிகாவுக்குப் பதிலளித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



