கோயிலை இடிக்கும் கும்பலுக்கு ஆதரவாக வாதாடும் முஸ்லீம் வழக்கறிஞர்கள் சங்கம்!
- Thinagaren Sanggaren
- 01 Feb, 2026
பிப்ரவரி 1,
சட்டவிதிகளை மீறிய கோயில்களை இடிக்க முயற்சிக்கும் கும்பலுக்கு ஆதரவாக மலேசிய முஸ்லீம் வழக்கறிஞர்கள் சங்கம் துணையாக இருக்கும் என அறிக்கை வெளியிட்டுள்ளது. தனியார் நிலத்திலும் அரசாங்க நிலத்திலும் கட்டப்பட்டிருக்கும் கோயில்களை இடிக்க Tamim Dahri எனும் தனிநபர் பொதுமக்களிடமிருந்து வசூல் செய்வதை எதிர்த்து HINDU TEMPLE TASK FORCE மலேசியா எனும் தன்னார்வாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து வரும் நிலையில் Tamim Dahri உட்பட மேலுமிருவரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து அதன் பின்னர் விடுதலை செய்திருப்பது காவல்துறையின் அதிகார மீறலைக் காட்டுவதாக மலேசிய முஸ்லீம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் Muhamad Hisham Marzuki தெரிவித்தார்.
Tamim Dahri உட்பட மேலும் இருவரைக் காவல்துறை விசாரித்து தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதிமன்றம் அவர்கல் இருவரையும் விடுதலை செய்துள்ளது. Tamim Dahri போன்றவர்கள் சட்டத்தை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. சட்டத்தை மீறிய செயல்களுக்கு எதிராகப் போராடுகிறார்கள். Tamim Dahri குழுவினருக்குச் சட்ட ரீதியாக ஆதரவளிக்க மலேசிய முஸ்லீம் வழக்கறிஞர்கள் சங்கம் உறுதுணையாக இருக்கும் என அதன் தலைவர் Muhamad Hisham Marzuki தெரிவித்தார்.
இதுபோன்ற கைதுகள் மற்றும் பறிமுதல்கள் தொடர்ந்தால், இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சியின் மீதான மக்களின் நம்பிக்கையிலும், சட்டத்தை அமல்படுத்துவதில் அதிகாரிகளின் நேர்மை மற்றும் சுதந்திரத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதிகாரிகள் வேண்டுமென்றே மிரட்டல் தந்திரங்களைப் பயன்படுத்துவதாகவும், நில ஆக்கிரமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் இம்மாதிரியானக் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மலேசிய முஸ்லீம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் Muhamad Hisham Marzuki தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



