கோயில்களைப் பாதுகாக்க சிறப்பு குழு அமைக்கப்படும்! மலேசிய இந்து சங்கம்!
- THINAGAREN SANGGAREN
- 20 Feb, 2026
பிப்ரவரி 20,
மலேசிய இந்து சங்கம் இந்து இயக்கங்களுடன் ஒருங்கிணைந்து கோயில்களுக்கான ஒருங்கிணைப்புக் குழு அமைக்க முதற்கட்ட பணிகளைத் தொடங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக முதல் கூட்டம் நடத்தப்பட்டதாகவும் ம.இ.காவினரும் முக்கிய இந்து மத அமைப்புகளுடன் கலந்துரையாடல் நடத்தியாகவும் மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் தெரிவித்தார். தற்போது கோயில்களுக்கு எதிரானப் பிரச்சாரம் அதிகரித்துள்ளதால் கோயில்களின் நிலப்பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு இந்து சங்கம் இந்த ஒருங்கிணைந்த குழுவை அமைத்திருப்பதாக இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் தெரிவித்தார்.
முதற்கட்டமாக நாடு முழுவதுமுள்ள ஆலயங்களைப் பட்டியல்படுத்த அனைத்து ஆலயங்களையும் ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் தரவுகளின் அடிப்படையில் கோயில்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க முன்னெடுப்புகள் எடுக்கப்படும் என இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆலயங்களுக்குத் தொடர்ச்சியான வழிகாட்டலும் சட்ட உதவிகளையும் இந்து சங்கம் வழங்கும் என தங்க கணேசன் தெரிவித்தார். அதன் பின்னரே இந்து ஆலயங்கள் தொடர்பானப் பாதுகாப்பிற்கும் அதன் மேம்பாட்டுக்கும் அரசாங்கத்தை வலியுறுத்த முடியும் என தங்க கணேசன் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
Inbachudar Muthuchandran
கோயில் Haram என்பதும் kuil tanpa izin என்பதும் ஒரே அர்த்தம் தான் இதனால் கோயில் போராட்டவதிகள் kuil haram என்று சொல்லிவிட்டார்கள் என்று அங்கலாய்த்துக் கொள்ள வேண்டாம்.HARAM என்றால் சட்டவிரோதம்.கோழி கொட்டகை போல ஆங்காங்கே கோயில் அமைப்பது சட்ட விரோதம் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.



