நடுவிரலைக் காட்டி சண்டைக்கு அழைத்த பெண் ஓட்டுநர்! காவல்துறை விசாரணை!

top-news

மார்ச் 20,

சாலையில் அபாயகரமாக வாகனத்தைச் செலுத்திய பெண் ஓட்டுநரைப் பின்னிருந்து வந்த வாகனமோட்டி கண்டித்ததால் ஆத்திரப்பட்ட பெண் ஓட்டுநர் நடு விரலைக் காண்பித்து ஆபாசமாகத் திட்டும்படியானக் காணொலி சமூகவலைத்தலத்தில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட பெண் ஓட்டுநரைக் காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளதாக Padawan மாவட்டக் காவல் ஆணையர் Mohd Irwan Hafiz தெரிவித்தார்.

நேற்று மாலை 5.50 மணிக்கு Batu Kawa சாலையில் சம்மந்தப்பட்ட பெண் ஓட்டுநர் 18 வயது ஆண் ஓட்டுநரை நோக்கி அச்செய்கையைச் செய்ததாகவும் பாதிக்கப்பட்ட 18 வயது ஆண் ஓட்டுநர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் Padawan மாவட்டக் காவல் ஆணையர் Mohd Irwan Hafiz தெரிவித்தார். ஆபாசச் செய்கையைப் புரிந்த பெண்ணை அவரின் வாகனத்தின் அடையாள எண்ணைக் கொண்டு தேடி வருவதாகவும் Padawan மாவட்டக் காவல் ஆணையர் Mohd Irwan Hafiz தெரிவித்தார்.

Seorang pemandu wanita yang menunjukkan isyarat lucah dan memaki pemandu lain di Batu Kawa sedang disiasat polis. Kejadian yang tular di media sosial berlaku selepas pemandu lelaki berusia 18 tahun menegur cara pemanduan wanita tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *