கமல் தயாரிப்பில் 2-வது முறையாக இணையும் சிவகார்த்திகேயன்!

top-news
FREE WEBSITE AD

நடிகர் சிவகார்த்திகேயன் மீண்டும் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நடிக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.ஏற்கனவே கமல் தயாரிப்பில் 'அமரன்' படத்தில் நடித்த சிவகார்த்திகேயன், அந்தப் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அதே நிறுவனத்துடன் இணையவுள்ளார்.

'அமரன்' திரைப்படம் 2024-ஆம் ஆண்டின் இறுதியில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படமாக அமைந்தது.அமரன் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டத் திரைப்படம். மறைந்த இந்திய ராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வீரமரணத்தையும், அவரது வாழ்க்கையையும் மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது.மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் வாழ்ந்திருந்தார். அவரது திரைப்பயணத்திலேயே இது மிகச்சிறந்த நடிப்பாகக் கருதப்படுகிறது. ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை மிக நேர்த்தியாக இயக்கியிருந்தார்.


இந்த நிலையில் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தப் புதிய படத்தை 'டாடா' திரைப்படத்தை இயக்கிப் புகழ்பெற்ற கணேஷ் கே. பாபு இயக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இது குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *