அப்பளம் சாப்பிட்டு சிவாஜியிடம் மாட்டிய சிவக்குமார்!

top-news
FREE WEBSITE AD

தமிழ் சினிமாவில் நடிகரும் சிறந்த ஓவியருமான சிவக்குமார், பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நிலையில், தொடக்கத்தில், கடவுள் வேடத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 1965-ம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சிவக்குமார். ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கிய இந்த படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாயகனாக நடிக்க, சுரேந்தர் என்ற முக்கிய கேரக்டரில் சிவக்குமார் நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், சிவக்குமாருக்கு பட வாய்ப்பும் அடுத்தடுத்து கிடைத்து வந்தது. அடுத்து மோட்டார் சுந்தரம் பிள்ளை, தாயே உனக்காக,சரஸ்வதி சபதம் கந்தன் கருணை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சிவாஜி கணேசனுடன் ஒரு படப்பிடிப்பின்போது நடந்த சுவாரசியமான தகவல்களை சிவக்குமார் கூறியுள்ளார். ஒரு படப்பிடிப்பின்போது, டைனிங் டேபிள் காட்சி எடுக்கப்பட்டது. இலையில் அப்பளம், சாதம், ஊறுகாய் போன்ற உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டன. ரிகர்சல் நடந்தபோது, தான் என்ன செய்ய வேண்டும் என்று நடிகர் சிவக்குமார் ஒருவர் பக்கத்தில் கேட்க, அதற்கு அவர், "நீங்கள் சும்மா சாப்பிடுங்கள், உங்களுக்கு வேறு வேலை இல்லை" என்று கூறியதாகத் தெரிகிறது.

இதனால், ஒத்திகையின்போதே சிவக்குமார் இலையில் இருந்த அப்பளத்தை சாப்பிட்டு விடுகிறார். "கட்" சொல்லி அடுத்த ஷூட்டுக்குத் தயாரானபோது, இலையில் அப்பளத்தைக் காணாமல் இயக்குநர் உட்பட படக்குழுவினர் அப்பளத்தைத் தேடுகின்றனர். இயக்குநர் சிவக்குமாரின் இலையைப் பார்த்தபோது, அங்கே அப்பளத்தின் பொடிப் பொடியான துண்டுகள் இருந்ததைக் கண்டார்.

பின்னர் சிவக்குமாரிடம் இயக்குநர் சென்று ரிகர்சலில் சாப்பிட வேண்டாம் சாப்பிடுவதுபோல நடித்தால் போதும் என்று கூறியுள்ளார். பின்னர் சிவக்குமாருக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டதாம், அப்படியே சிவாஜியை பார்த்தாராம், யாருடா இவன் காட்டான் என்று அவர் நினைத்து இருப்பதாக சிவக்குமார் கூறினார்.

இதன் மூலம், ஒத்திகையின்போது நடிகர்கள் உண்மையிலேயே சாப்பிடக் கூடாது, ஆனால் சாப்பிடுவதுபோல மட்டுமே நடிக்க வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் நடிகர் சிவாஜி கணேசன் ஒரு சிறந்த முன்மாதிரியை உருவாக்கியிருப்பதாகவும் தனக்குக் கிடைத்த பாடம் குறித்து சிவக்குமார் அவர்கள் விளக்குகிறார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *