PSA ஸ்குவாஷ் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் மலேசியப் பெண்ணாக சிவசங்கரி சாதனை!
- Shan Siva
- 20 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 20: 2012-ல் நிக்கோல் டேவிட்டுக்குப் பிறகு, PSA ஸ்குவாஷ் டூர் ஃபைனல்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் மலேசியப் பெண் என்ற பெருமையை எஸ். சிவசங்கரி பெற்றுள்ளார்.
நேற்று மாலை
பாரிஸில் 74 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான அரையிறுதிப்
போட்டியில், முதல் நிலை வீராங்கனையான எகிப்தின் அமினா
ஓர்ஃபியை 8-11, 11-10, 11-8,
11-10 என்ற செட் கணக்கில்
வீழ்த்தி, அவர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளதாக பெர்னாமா
செய்தி வெளியிட்டுள்ளது.
நான்காம் நிலை
வீராங்கனையான சிவசங்கரி, இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இரண்டாம்
நிலை வீராங்கனையான எகிப்தின் ஹனியா எல் ஹம்மாமியை எதிர்கொள்கிறார்.
நேருக்கு நேர்
புள்ளிவிவரங்களின்படி ஹனியாவுக்குச் சாதகமாக உள்ள நிலையில், இதற்கு முன்னர் அவர்கள் மோதிய 10 போட்டிகளில் சிவசங்கரி இரண்டில் மட்டுமே
வெற்றி பெற்றுள்ளார்.
அந்த இரண்டு
வெற்றிகளும் 2017-ஆம் ஆண்டு மகளிர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்
போட்டியிலும், 2024-ஆம் ஆண்டு லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக்
போட்டியிலும் கிடைத்தன.
கெடாவைச் சேர்ந்த, உலகின் 5-ஆம் நிலை வீராங்கனையான இவர், கடந்த ஏப்ரல் மாதம் சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் நடைபெற்ற 2026 கிராஸ்ஹோப்பர் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம், இந்த ஆண்டு மேலும் ஒரு பட்டத்தைச் சேர்க்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



